You Are Here: Home » News & Analysis (செய்திகளும் - ஆய்வுகளும்) » “உங்கள் பணம் உங்கள் கையில்” திட்டம் – காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், வரும் அக்., 1க்குள் வங்கி கணக்கு துவக்க வேண்டும் – மக்கள் கவனத்திற்கு

“உங்கள் பணம் உங்கள் கையில்” திட்டம் – காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், வரும் அக்., 1க்குள் வங்கி கணக்கு துவக்க வேண்டும் – மக்கள் கவனத்திற்கு

 




திருப்பூர்:”உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற, மத்திய அரசின் திட்டத்தில் பயனடையும் வகையில், காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், வரும் அக்., 1க்குள் வங்கி கணக்கு துவக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு 26 வகையான திட்டங்கள் மூலமாக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இனி, மானியத்தை சம்பந்தப்பட்ட
நிறுவனங்களுக்கு அனுப்பும் முறையை கைவிட்டு, வாடிக்கையாளர்களுக்கு
நேரடியாக வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டம், நாடு முழுவதும் 43 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. இரண்டாம் கட்டமாக, வரும் ஜூலை 1 முதல், மேலும்
78 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.அம்மாவட்டங்களில், காஸ் சிலிண்டர் மானியத்தையும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், தமிழக மாவட்டங்களில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இருந்தாலும், நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் மானியத்தை
வங்கிகள் மூலமாக விடுவிக்கும் நிலை
ஏற்படும் என்பதால், வரும் அக்., 1க்குள் காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், வங்கி சேமிப்பு கணக்கு துவக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர்கள் நீங்கலாக, மற்ற வாடிக்கையாளர்களை கண்டறிந்து, புதிய வங்கி கணக்கு துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னோடி வங்கி அதிகாரிகள் கூறுகையில், “வரும் அக்., 1ம் தேதி முதல், காஸ் சிலிண்டர்களுக்கான மானியம் வங்கிகள் மூலமாக விடுவிக்கப்பட உள்ளது. எனவே, வங்கி சேமிப்பு கணக்கு இல்லாத காஸ் இணைப்புதாரர்கள், விரைவில் வங்கி கணக்கு துவக்க வேண்டும். அந்தந்த காஸ் வினியோகஸ்தர்கள் கேட்கும்போது, தவறாமல் வங்கி கணக்கு எண்ணை கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது,’ என்றனர்.இனி, மானியத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பும் முறையை கைவிட்டு, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

Source: Dinamalar

About The Author

Number of Entries : 62

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top