காளான்

 
காளான்

என்ன சத்து?

100 கிராம் காளானின் பொட்டாசியம் 320 மில்லிகிராம், பாஸ்பரஸ் 110 மில்லி கிராம், செலினியம் உப்பு சிறிதளவு உள்ளன.

100 கிராம் காளானில் 43 கலோரி சத்து கிடைக்கிறது. புரதம் 3.1 கிராம் உள்ளது. காளானில் ‘குளுட்டாமிக்’ என்ற அமிலம் நிறைய இருக்கிறது. ‘ட்ரைப்டோபன்’ என்ற அமினோ அமிலத்தைத் தவிர எட்டு முக்கியமான அமிலங்களும் வைட்டமின்களான தயாமின், ரிபோஃபிலவின் ஆகியவை உள்ளன. இதனால் கை, கால், நரம்புகள் தளர்ச்சி ஏற்படாது. மேலும் 0.8 கிராம் அளவே கொழுப்பு உள்ளது.4.2 கிராம் அளவே மாவுச் சத்து உள்ளது. இதனால் உடல் எடை கூடாது. சர்க்கரை நோயாளிகளூம் இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.

காளான் ஆப்பிள் பழத்தை விட 12 மடங்கு புரதச் சத்தும், மருத்துவ குணங்களும் கொண்டது.
காளான்
என்ன பலன்?

காளான் ரத்தத்தை சுத்தப்படுத்தும். சில காளான் வகைகளில் லென்ட்டினன் என்ற புற்று நோய் எதிர்ப்புப் பொருள் உள்ளது. இது வயிறு மற்றும் பெருங்குடல் புற்று நோய்ச் செல்களை விரைந்து அழித்து விடுகின்றன.

காளான் சூப் தயாரித்து குடித்தால், ஆறாத புண்ணும் விரைவில் ஆறி, உடலுக்குப் புது தெம்பை தந்துவிடும்.

எச்சரிக்கை

எப்போதும் புதிய காளான்களையே வாங்க வேண்டும். வாங்கிய உடன் சமைத்து விட வேண்டும்.

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top