You Are Here: Home » Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) » குங்குமபூவும் அதன் மருத்துவ குணமும்..!

குங்குமபூவும் அதன் மருத்துவ குணமும்..!

 
 

குங்குமபூவும் அதன் மருத்துவ குணமும்..!

 

இந்த இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்தத் தாள்களே குங்குமம் ஆகும். இது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனைத் தண்ணீரில் இட்டால் கொஞ்ச நேரத்தில் தண்ணீரும் இதன் நிறமாக மாறிவிடும்.

 

இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும்.
ஆயுர்வேத மருத்துவப் பயன்கள்

644471_440319276061181_734718024_n

* இதனால் விந்துக் குறைவு, தண்ணீர் தாகம், தலைவலி, கண்ணில் பூ விழுதல், கண்ணோய், வாந்தி, காது நோய், வாயினிப்பாக இருத்தல், வயிற்று அழுக்குகள் போகும்.

* உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர்.

* கர்ப்பம் தரித்துள்ள தாய்மார்கள் இதனை வெற்றிலையுடன் கலந்து தின்றாலும் அல்லது காய்ச்சிய பாலில் இட்டு அருந்தினாலும், பிறக்கும் குழந்தை அழகாகவும், பிரசவ வலி இன்றியும் குழந்தை பிறக்கும் என்பர். மாதவிலக்கு, வலியைப் போக்கும் குணம் கொண்டது.

* தலைவலி, மூக்கில் நீர்வடிதல், இவற்றிற்கு குங்குமத்தை தாய்ப்பாலில் உறைத்து நெற்றியில் பற்று போடலாம்.

* விளாம் பிசின், பனை வெல்லம் இவைகளுடன் சேர்த்தரைத்து துண்டுத்தாளில் வைத்து தடவி கன்னப்பொறியின் மீது பற்றாக போட வலி நீங்கும். மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் சேர்க்கலாம்.

* குங்குமப்பூ 1 பங்கும், தண்ணீர் 80 பங்கும் ஊற வைத்து வடிகட்டி வேளைக்கு 50 – 100 மி.லி. அளவு கொடுக்க மேற்படி நோய்கள் தீரும்.

* பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும் போது சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்துக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.

* குழந்தை பிறந்தபின் சிறிதளவாக 3 வேளைகள் கொடுக்க இரத்தப்போக்கு நீங்கும்.

* 20 கிராம் பூவைத் தண்ணீரில் அரைத்து, உருண்டை செய்து உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுக்குள் இறந்துபோன குழந்தை வெளிப்படும். 10 கிராம் குங்குமப்பூவை சுமார் 15 பலம் நீரில் சேர்த்துக் குடிநீர் செய்து கொடுத்தால் பசி அதிகம் உண்டாகும்.

குங்குமப்பூவின் மருத்துவ குணங்கள் யுனானி மருத்துவம்:

தோற்றம் : குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே ‘குங்குமப்பூ’ என்று அழைக்கின்றோம். இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும்.

குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். குங்குமப்பூ, கசம்பூவைப் போன்று இருக்கும். இதன் வேர் வெங்காயத்தைப் போன்று இருக்கும்.

இயல்பு : உஷ்ணம் 2, வறட்சி 1.

முக்கிய குணங்கள் : மலச்சிக்கலை உண்டாக்கும். கட்டி, வீக்கங்களைக் கரைக்கும். இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்குச் சக்தி தரும். தடைப்பட்ட சிறுநீர் மற்றும் மாதவிலக்கைப் பிரியச் செய்யும்.

பயன்படுத்தும் முறை : கல்லீரல் வீக்கம், கருப்பை வீக்கம் ஆகியவற்றைக் கரைக்க இதைத் தனியாகவோ அல்லது மற்ற மருந்துகளுடன் கலந்தோ மேல் பூச்சு மருந்தாகப் பயன்படுத்துவார்கள்.

பார்வைக் குறைவைப் போக்க இதைத் தனியாகவோ அல்லது மற்ற பொருத்தமான மருந்துகளுடன் சேர்த்தோ அரைத்துக் கண்களில் விடுவார்கள். இதயம் மற்றும் மூளைக்கு சக்திதர பலவகைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மைக் குறைவைப் போக்க மற்ற மருந்துகளில் கலந்து பயன்படுத்துவார்கள்.

மாதவிலக்கை தாராளமாகப் பிரியச் செய்ய உள் மற்றும் வெளிப்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் நாரை ஆண்களின் சிறுநீர்க்குழாயில் வைத்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். அளவு : 1 கிராம் முதல் 2 கிராம் வரை பயன்படுத்தவும். தீய விளைவுகள் : சிறுநீரகப் பையை பலவீனமாக்கும். பசியைக் குறைக்கும்.

தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை : இத்துடன் அனிசூன், சிகன்ஜபீன் மற்றும் ஜரிஷ்க் கலந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக உத்ரஜ் விதை, பெருலவங்கப்பட்டையைப் பயன்படுத்தலாம்.

About The Author

உங்களில் ஒருவன் !!

Number of Entries : 415

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top