You Are Here: Home » Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) » குளிர்பானத்தால் வரும் பிரச்னைகள்

குளிர்பானத்தால் வரும் பிரச்னைகள்

 




பொதுவாக குளிர்பானங்களை விரும்பாதவர்கள் இல்லை எனலாம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பது குளிர்பானங்களே. இதிலும் கோடைக் காலம் வந்து விட்டால் சொல்லவே தேவையில்லை, கடைகளில் அதிகம் விற்பனையாகும் பொருள் குளிர்பானமாக தான் இருக்கும். ஆனால் பானங்களை அடிக்கடி எடுத்து கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் என்னவென்று பலரும் அறியாமல் தான் உள்ளனர்.

soft Soft_drink_shelf11

அமெரிக்காவிலுள்ள நியு ஆர்லியன்ஸ் நகரில் குளிர்பானங்களால் ஏற்படும் ஆபத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இனிப்பு கலந்த குளிர்பானங்களை அருந்துவதால் ஆண்டுதோறும் 1.8 லட்சம் மக்கள் இறப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

“சர்க்கரைப் பொருள்கள் கலந்த குளிர்பானங்களை அருந்துவதால் எடை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகின்றன. 2010-ம் ஆண்டுக்கான ஆய்வின்படி குளிர்பானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுள் 1.3 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும் 44 ஆயிரம் பேர் இதய நோய்களாலும் 6,000 பேர் புற்றுநோயாலும் இறந்தது தெரியவந்துள்ளது.

குறைந்த அளவில் குளிர்பானம் அருந்தும் ஜப்பானியர்களுள் 10 லட்சம் பேர்களுக்கு 10 பேர் மட்டுமே மரணமடைகின்றனர்” என்று ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே மக்கள் குளிர்பானங்களை அடிக்கடி அருந்துவதை தவிர்த்து உடல் நலத்தை பாதுகாக்கலாம்.

About The Author

உங்களில் ஒருவன் !!

Number of Entries : 415

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top