கோச்சடையன் ரணதீரன்

 
கோச்சடையன் !

425479_10151365642920198_714052473_n
சமீபத்தில் தமிழ மக்கள் அதிகமாக உச்சரித்த பெயர் ” கோச்சடையன் ” , எப்படி உச்சரிக்காமல் இருக்க முடியும் ? தமிழக மக்கள் அனைவரின் அபிபான நடிகரின் வரப்போகும் படம் ஆயிற்றே ! !. இதில் நம்மில் எத்தனை பேர் அந்த படத்திற்கு கொடுக்கும் ஆர்

வத்தை, அந்த பெயரின் சொந்தக்காரனின் வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள கொடுத்திருப்போம் ! ! ? ? யார் இந்த ” கோச்சடையன் ” ? ? இதோ அவனைப்பற்றிய சில தகவல்கள்..சங்கம் வைத்து நம் தமிழை காத்த மரபில் வந்த பாண்டிய மன்னன் தான் இந்த ” கோச்சடையன் ரணதீரன் “கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தவன். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.
ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

படையெடுத்துச் சென்ற இவன், முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது. .

ரணதீரன் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருவாலவாய் இறைவனையும், திருப்பரங்குன்றப் பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம் மற்றும் சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. (பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).

இடைக்காலப் பாண்டியன் ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.

இவ்வளவு சிறப்புடைய நம் மன்னனை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ? ? ?.

” இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய்,
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே “

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top