You Are Here: Home » Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) » தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம்

தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம்

 
935093_595743650443889_1875846236_n

தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம் .

பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான்.

சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது.

தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய
கம்பத்தின் மீதும், கயிற்றில் தொங்கும் கம்பத்தின் மீதும், அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மீதும் தாவி ஏறி ஆசனங்கள் செய்யும் மல்லர் கம்பம் வித்தையும் மிக அருகி வரும் கலைகளில் ஒன்றாகும்.

வீரம் செறிந்த விளையாட்டான மல்யுத்தம், சிலம்பம், களாரி, போன்று மல்லர் விளையாட்டிலும் நம் முன்னோர்கள் சிறப்பு பெற்ற கலைகள் ஆங்கிலேயர்களாலும் அன்னிய ஊடுருவலாலும் அழிக்கபட்டது போல் மல்லர் கம்பம் விளையாட்டும் நம்மில் இருந்து அழிக்கபட்டது.

மல்லர் கம்பம் யோகாசனம்,தியானம் போன்று மனதையும் உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடல் பயிற்சி ஆகும்.

சிலம்பத்துக்கும் மல்லர் விளையாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சிலம்பத்தில் வீரன் நிலையாக நின்றிருப்பான் கம்புதான் சுற்று சுழலும். ஆனால் மல்லர் விளையாட்டில் கம்பம் நிலையாக இருக்க வீரன் அதன் மேல் சுற்றி சாகசம் புரிவான்.

மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. மகாராஷ்டிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறும்.

இதுபோல் பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியுள்ளன.

விழுப்புரம் அருகே உள்ள வி.மருதூர் கிராமத்தை சேர்ந்த உலகதுரை என்ற உடற்பயிற்சி ஆசிரியர் மல்லர் விளையாட்டுப் பயிற்சியை முடித்தபின் மாணவர்களுக்கும், கிராமபுற இளைஞர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்தார். தமிழகம் முழுவதும் 200 மல்லர் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டின் உடற்கல்வியியல் பல்கலை கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்த மதுரையை சேர்ந்த திருமலைசாமி கூறுகையில், நான் குவாலியரில் லட்சுமிபாய் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் படித்த போது மல்லர் விளையாட்டு ஒரு பாடமாக இருந்தது. தமிழர் விளையாட்டு என்பதால் அதன் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. நான் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது மல்லர் விளையாட்டை அனைத்து கல்விநிலையங்களிலும் கொண்டுவரும் திட்டத்தை அரசுக்கு அளித்தேன். தமிழக அரசு அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்றார்.

திராவிட, பார்பண ஆட்சிகளில் தமிழர் கலைகளும் தமிழர்களும் மதிக்கபடுவதில்லை . மனிதர்களுக்குப் பயன்படும் தமிழர் சொல்லிய நல்ல விசயங்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் கொடுப்பதும் இல்லை. இன்றும் இவ் அங்கிகாரம் நிலுவையில் இருக்கின்றது.

ஆங்கிலய ஆட்சியில் தமிழர்கள் தற்காப்புக் கலைகள் அழிக்கபட்டன. தற்காப்புக் கலை பயின்ற தமிழர்கள் சிந்தனைவாதிகளாகவும் அடிமைப்பட விரும்பாமல் இருந்ததே இதற்குக் காரணம். பிற்காலத்தில் திராவிட பார்பண ஆட்சியிலும் தமிழர் கலைகள் தமிழர் வரலாறு, தமிழர் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்க பட்டன. இதற்கு இந்து எதிர்ப்பு என்று காரணம் சொல்ல பட்டது.தமிழ் சித்தர்கள் சொல்லிகொடுத்த யோகாசனம், தியானம் என்ற மக்களுக்கு பயன் படக்கூடிய உன்னத கலைகள் கூட இந்துமத முத்திரை குத்தி ஒதிக்கிவைக்க பட்டன திராவிட ஆட்சியில். , பார்ப்பண ஆட்சியில் தமிழர் அங்கிகாரங்கள் இழந்தனர்.

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top