தமிழர்கள்

 
397788_597567790261475_598111860_n

தமிழன் :

தமிழர்கள் என்பவர்கள் யார் என்று தமிழர்கள் அறிந்து கொள்ளுதல் வேண்டும். தமிழர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ , சமயத்தையோ, சாதியையோ சார்ந்தவர்கள் அன்று . அவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கத்தை அடிப்படையாக கொண்டவர்களும் அன்று. அவர்களுள் எண்ணற்ற பேதங்கள் உள்ளன.

கடவுளை நம்பாத நாத்திகர்கள் முதற்கொண்டு இந்துவும், சமணர்களும், பௌத்தர்களும், இஸ்லாமியரும், கிறிஸ்துவரும், சைவ, வைணவ, சாக்த, கௌமார சமயத்தை தழுவியவர்களும், இயற்கையை வழிபடுபவர்களும் இதில் அடக்கம். சமயங்கள் மதங்களை மறுத்து உயிர்களை வணங்கும் சமரச சன்மார்கிகளும் தமிழினத்தில் அடக்கம். பல வகையான சமய மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், பகுத்தறிவு கோட்பாடுகள், இறை மறுப்பு கோட்பாடுகளை உள்ளடக்கியது தமிழனம்.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, எலி இறைச்சி சாப்பிடுபவர்கள் உட்பட, எந்த வகையான இறைச்சியையும் உட்கொள்ளாது புலாலை முற்றிலும் மறுத்தவர்கள் தமிழினத்தில் அடக்கம். உணவும், கடவுள் வழிபாடும் தனிமனித சுதந்திரத்திற்கு உட்பட்டது.

இவைகள் காலத்திற்கு, அறிவு விளக்கத்திற்கு தகுந்தாற்போல் மாற்றம் பெரும், மாறும். இவைகளை வைத்து தமிழர்களை பிரிப்பது நமது அறிவின்மையை மட்டுமே காட்டுகிறது.

தமிழர்கள் என்பவர்கள் பரந்து பட்ட ஒரு பேரினம். இந்த இனமானது மேற்கூறிய
எண்ணற்ற வேறுபாடுகளை கொண்டதானாலும், தமிழ் மொழி என்ற ஒற்றை அடையாளத்தை மட்டுமே பொதுவில் தாங்கி நிற்கின்றது.

மொழியே நமக்கெல்லாம் இணைப்புப் பாலமாக உள்ளது . அதன் அடிப்படையில் தான் நாம் அனைவரும் கட்டமைக்கப்பட்டுள்ளோம். அதனால் இந்த வேறுபாடுகளை வைத்து தமிழினத்தை பிரித்து பார்க்காமல், ஒருவருக்கொருவர் சண்டையிடாமல், ஒருவர் நம்பிக்கையை மற்றவர் இகழ்ச்சியாக எண்ணாமல், தமிழ் மொழி, தமிழினம்
என்று அடையாளத்தோடு கால ஓட்டத்தில் முன் நகர்வோம்.!
வலிமையான தமிழ் சமுதாயம் படைப்போம்..!!!

-அதிசயம்

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top