தமிழ்வழிக் கல்வி

 
941275_10152829839375198_452495222_n

தமிழ் வழியில் படித்தால் வாழ்கையில் முன்னுக்கு வர முடியாது , எதையும் சாதிக்க முடியாது என தவறான தாழ்வான கருத்தியல் கொண்ட தமிழர்களுக்கு இந்த செய்தி உரித்தாக்கப்படுகிறது.

நிலவுக்கு விண்கலன் அனுப்பி சாதனை புரிந்த தமிழர் மயில்சாமி அண்ணாதுரை தான் சாதித்ததற்கு காரணம் தாய் மொழியில் கல்வி பயின்றது தான் என சொல்கிறார். இது தமிழுக்கு தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய பெருமை. ஆங்கில வழியில் பயின்று சாதிப்பதை விட தமிழ் வழியில் பயின்று சாதிப்பதே நமது பெருமையாக கொள்வோம்.

இனி வரும் காலத்தில் வரும் தலைமுறை அனைவரும் தமிழ் வழிக் கல்வியை பயில நாம் ஆதரவாக நிற்போம். அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டாய தமிழ்வழிக் கல்வி இருக்க வேண்டும் என போராடுவோம். அதன் மூலம் நம் எல்லோரின் குழந்தைகளும் தாய்மொழி வழிக் கல்வியை பயிலுமாறு செய்வோம். இது தான் எதிர்கால தமிழ்ச் சமூகத்திற்கு நல்லதொரு தீர்வாக அமையும்.

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top