You Are Here: Home » News & Analysis (செய்திகளும் - ஆய்வுகளும்) » தொடர் விபத்து அபாயம் காட்சிப்பொருளாக தானியங்கி சிக்னல்கள் – அரசு கவனத்திற்கு

தொடர் விபத்து அபாயம் காட்சிப்பொருளாக தானியங்கி சிக்னல்கள் – அரசு கவனத்திற்கு

 




Udumalpetஉடுமலை:உடுமலை நகரில், ஓராண்டுக்கும் மேலாக காட்சிப்பொருளாக இருக்கும் தானியங்கி சிக்னல்களால், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
உடுமலை நகரில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிற ரோடுகள் பிரியும் இடத்தில், விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து போலீஸ் சார்பில், கடந்தாண்டு இரண்டு புதிய இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டன.
அபாயம் நிறைந்த கொழுமம் ரோடு பிரிவு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டதும், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகத்தில் வரும் வாகனங்கள் வரும் போது, கொழுமம் ரோட்டில் விபத்தில் வாகனங்கள் பிரிந்து செல்வது மிகுந்த சிரமத்தை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தி வந்தது.
இப்பிரச்னைக்கு தானியங்கி சிக்னல் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிக்னல் அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொள்ளாச்சி ரோட்டில், திருப்பூர் ரோடு பிரியும் இடத்தில் அமைக்கப்பட்ட சிக்னலும் காட்சிப்பொருளாகவே உள்ளது.
இந்த சிக்னல்களில், செயல்விளக்கத்திற்காக அவ்வப்போது, மஞ்சள் நிற விளக்குகள் எரிய விடப்படுகின்றன. இதை பார்க்கும் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைக்கின்றனர். அப்போது, அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன.
தானியங்கி சிக்னல் அமைத்து ஓராண்டுக்கு மேலாகியும் செயல்பாட்டிற்கு கொண்டு வராத போக்குவரத்து போலீசின் சாதனையால், உடுமலை நகர மக்கள் நரக வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.

<Automated traffic signals in udumalpet not working. Will the government look into it?>

Source: Dinamalar

About The Author

Number of Entries : 62

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top