You Are Here: Home » Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) » ‘பட்டாபிராமர் கோவில்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

‘பட்டாபிராமர் கோவில்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

 




575490_438480179578640_538797794_n          551270_164284717067121_712429213_n

 

தமது மூலங்களை-வேர்களை மறந்த மதம் மாறிய முகமதியர்கள், கிருத்துவர்கள்:

முகமதியர்-ஐரோப்பியர்கள் வந்தபோது, இந்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை அழித்துவிட பலவழிகளில் முயன்றனர். துரதிருஷ்டவசமாக, மதம் மாறிய இந்துக்கள் அதாவது இப்பொழுது முகமதியர் / முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என்று உலாவரும் இந்தியர்கள், தமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக மூலங்களை அறிந்து அறியாதவாறு, வேர்களை வெட்டிவிட்டு, ஏதோ தாம் மத்தியத்தரைகடல் நாடுகளிலிருந்து வந்தது போல நடித்துக் கொண்டு, இந்தியாவை வெறுத்து வருகின்றனர். ஆகவே, அவர்கள் தமது மூலங்கள்-வேர்களை அறிந்து கொண்டு, இந்திய பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் முதலிய காரணிகளுடன் பிணைத்துக் கொண்டு வாழவேண்டும். சமீபத்தைய செஞ்சி கோவில் வழக்கு அந்த உண்மையினை எடுத்துக் காட்டுகிறது.

செஞ்சியின் சுருக்கமான சரித்திரம்:

செஞ்சியின் கடந்த 500-600 வருட கால சரித்திரம், அந்நிலையை அதிகமாகவே எடுத்துக் காட்டுகிறது. பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர, நாயக்கர் காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள் செஞ்சியில் காணப்படுகின்றன[1]. 15ம் நூற்றாண்டிலிருந்து நாயக்க மன்னர்கள் செஞ்சியின் முன்னேற்றத்திற்கு பல காரியங்களை செய்துள்ளனர்.ஆனால், 1564ல் முகமதியர்களால் விஜயநகர ராஜா விரட்டப்பட்டு, செஞ்சி  ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களது ஆட்சிக் காலத்தில் கோவில்கள் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டன, இடிக்கப்பட்டன, அவ்விடங்களில் மசூதிகள் கட்டப்பட்டன. 1712ல் செஞ்சி ராஜாவிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே, டேவிட் கோட்டையில் சண்டை நடந்தது[2]. 1721ல் ராஜா தேசிங் கப்பம் கட்டாததால் ஆர்காட் நவாப் படையெடுத்தான். சதத்துல்லா என்பவனின் கீழ் முகமதிய படை செஞ்சியை முற்றுகையிட்டது. போரில் கொல்லப்பட்டான். தேசிங்குவின் பெயர் தேஜ் சிங் என்பதாகும். ராஜஸ்தான் கவர்னர், சவரூப் சிங் என்பவரின் மகன். ராஜா தேசிங்கின் உடல் செட்டிக்குளத்தில் உள்ள மண்டபத்தில் தகனம் செய்யப்பட்டு அந்த இடத்தில் ஒரு கல்வெட்டும் பதிக்கப்பட்டது. ஆனால் அது 1878லேயே காணவில்லை என்று ஆர்காடு கெசட்டியர் குறிப்பிடுகிறது[3]. 1749ல் அன்வருத்தூன் ஆம்பூர் போரில் கொல்லப்பட்டவுடன், முறைதவறிய வழியில் பிறந்தவனான முஹம்மது அலி செஞ்சியைப்பிடித்துக் கொண்டான்[4]. பிரெஞ்சுக்காரர்களும், சந்தாசாகிப் (முகலாயர்களும்) சேந்து கொண்டு, கோவில்கள் தாக்கப்படக்கூடாது என்றால், பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி பணம் சம்பாதித்தனர்[5].

செஞ்சியில் இந்து கோவில்களின் நிலை:

 நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கட்டிய மிகப்பெரிய கோவில்கள், முகலாயர்-ஐரோப்பியர் நடத்திய போர்களில் சேதப்படுத்தப்பட்டன. கலைநயம்மிக்க பட்டாபிராமர் கோவிலில் இருந்த உயரமான துண்களை பிரெஞ்சு ஆட்சியின் போது, புதுச்சேரி கடற்கரையை அழகு படுத்த எடுத்துச் சென்றனர்[6]. 1860ல் பலியா என்ற ஜைன அதிகாரி மற்றும் சென்னை மாகாண அரசு உறுப்பினர், செஞ்சியிலிருந்து சித்தாமீர் என்ற இடத்திற்கு நிறைய சிற்பங்களையும், கற்தூண்கள் முதலியவற்றை எடுத்துச் சென்றுள்ளார்[7]. ஆங்கிலேயர்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை. 1858ல் ஆர்க்காடு கலெக்டர், ஸ்ரீ பட்டாபி ராமஸ்வாமி கோவிலின் அழகுமிகு தூண்களை எடுத்து கால். நீல் சிலையின் பீடத்துக்குக் கீழ் வைக்க “ஐடியா” கொடுத்தார்[8](அதாவது கோவில் தூண்களை அந்த அளவிற்கு இழிவு படுத்தவேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்). இன்றும் சிறப்பான கட்டுமானத்துடன் காணப்படும் செஞ்சிக் கோட்டை வெங்கடரமணர் கோவிலை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த கோவில்களில் மீதமிருக்கும் மண்டபங்கள், கோபுரங்கள், இதில் உள்ள சிற்பங்களும், பாரம்பரியத்தின் மீதும், கலையின் மீதும் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் வருத்தமடையச் செய்யும். கோடிக்கணக்கில் செலவு செய்து புதிய கோவில்களை கட்டுவதற்கு முன், பழமையான கோவில்களை பராமரிப்பதும், அழிவில் இருந்து தடுப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்

செஞ்சி ஶ்ரீ கோதண்டராமர் கோவில்:

இவ்விதமாக சுதந்திரத்திற்கு முந்தைய சரித்திரம் இருக்கும்போது, சுதந்திரத்திற்குப் பிறகு, திடீரென்று ஒரு கிருத்துவ பாதிரி, சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீகோதண்டராம கோவிலுடன் சேர்ந்த இடம் முழுவதும் தமக்குச் சொந்தம் என்று ஆரம்பித்தபோது, இன்னொரு புதிய பிரச்சினை தோன்றியது. இப்பிரச்சினையைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகள்

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top