You Are Here: Home » News & Analysis (செய்திகளும் - ஆய்வுகளும்) » பள்ளிகளில் பாலியல் கொடுமைக்கு .. “டயல்’ செய்யுங்க! 1098

பள்ளிகளில் பாலியல் கொடுமைக்கு .. “டயல்’ செய்யுங்க! 1098

 




1098பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுக்கவும், மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிளஸ் 1 பாடப்புத்தகத்தில், “ஹெல்ப்லைன்’ எண்கள் அச்சிடப்பட்டுள்ளன.
சமீப காலமாக, பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக பரவலாக புகார்கள் வருகின்றன. இதை தடுப்பதற்காக, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.  நடமாடும் ஆலோசனை மையம், ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை, பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர் நியமனம் என, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. இது தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும், அரசு ஈடுபட்டுள்ளது. இதுவரை, “சைல்டு ஹெல்ப்லைன்’ என்ற பெயரில், 1098 என்ற தொடர்பு எண் தரப்பட்டு, குழந்தைகள் மீட்புக்காக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. இந்த இலவச தொலைபேசி எண்ணிலேயே, பள்ளிகளில் நடக்கும் பாலியல் கொடுமைகள் தொடர்பான புகார்களையும் அளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இப்படியொரு ஹெல்ப்லைன் இருப்பது குறித்து, மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் விதத்தில், பாடப்புத்தகங்களில் இந்த எண் அச்சிடப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக, பிளஸ் 1 பாடப்புத்தகங்களில் நடப்பு கல்வியாண்டிலேயே இந்த எண் அச்சிடப்பட்டுள்ளது. இது கட்டணமில்லாத இலவச தொலைபேசி எண் என்பதால், எந்த தொலைபேசியிலிருந்தும் புகார் அளிக்கலாம். காவல்துறை உதவியுடன், நடவடிக்கை எடுக்கப்படும்.
பாடநூல் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே, இந்தாண்டு பிளஸ் 1 புத்தகங்களின் அட்டையில், “ஹெல்ப்லைன்’ எண் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து, அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் இந்த எண் அச்சிடப்படும்’ என்றார்.
பள்ளிகளில் பாலியல் கொடுமைகளைத் தடுப்பதற்காக, இந்த முயற்சியை எடுத்துள்ள அரசு, இதில் வரும் புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இத்தகைய கொடுமைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Source: Dinamalar

About The Author

Number of Entries : 59

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top