You Are Here: Home » All Other Categories » வீட்டுத் தோட்டம் – மண்புழு உரம் தயாரிப்பு

வீட்டுத் தோட்டம் – மண்புழு உரம் தயாரிப்பு

 
156427_496598210397767_400723378_nவீட்டுத் தோட்டம் – மண்புழு உரம் தயாரிப்பு
—————————————————————

விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழு, உலகில் 120 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகை மண்புழுவும் வெவ்வேறு விதமான தட்பவெப்ப சூழலில்,வெவ்வேறு ஆழத்தில் 3 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆண், பெண் என்ற தனிப்பால் இல்லை. அனைத்து புழுக்களுமே 45 நாட்களுக்கு ஒரு முறை 30 முட்டைகள் வரை இடும்.
காய்கறி, வைக்கோல், ஈரவைக்கோல், காய்ந்த சருகுகள், சாணஎரு, கழிவுஎரு, கோழிஎரு உள்ளிட்டவைகள் மண்புழுக்களுக்கு சிறந்த உணவாகும்.

மண்புழுக்களுக்கு உணவை விட தண்ணீர் மிகவும் அவசியம். உண்ணும் உணவில் 30 முதல் 40 சதவீதம் வரை தண்ணீர் இருக்க வேண்டும். பொதுவாக பகல் நேரத்தைவிட இரவில்தான் அதிகமாக சுற்றி திரியக்கூடியது . சூரியக்கதிர்கள் இதன் மீது நேரடியாக படக்கூடாது. சூரியகதிர்கள் பட்டால் உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்துவிடும்.

வெளியிடங்களில் விலைக்கு வாங்கி கொள்ளலாம் கிடைக்காதபட்சத்தில் வீட்டில் கண்டறியவேண்டும். எவ்வாறு என்றால்,

* 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.

* வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.

* 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். மண்புழுக்கள் அதிக அளவில் வெளி வரத்தொடங்கும். இவற்றை சேகரித்து வைத்துகொண்டு உரம் தயாரிக்க வேண்டியது தான்.

தயாரிக்க தேவையானவை

* 10க்கு 15 அடி நீள, அகலம், 4 அடி உயரமுள்ள தொட்டி அல்லது தார்பாலின் ரெடிமேட் சீட்

* அடியில் பரப்ப செம்மண் அல்லது வண்டல் மண்

* காய்கறிக்கழிவுகள், காய்ந்த இலைதழைகள்

* மாட்டுச்சாணம்

* மண்புழுக்கள்

தொட்டியில் செம்மண், அதற்கு மேல் காய்கறிக்கழிவு, காய்ந்த இலைதழைகளை பரப்ப வேண்டும். 20 நாள் கழித்து, அதன் மேல் மாட்டுச்சாணம் கொட்ட வேண்டும். அடுத்த 10 நாளில் மாட்டுச்சாணத்தின் மேல் மண் புழுக்களை விட வேண்டும். மேல் பகுதியில் தேங்காய் நார் பரப்பலாம் அல்லது சாக்கு பையை வைத்து மூடி வைக்கலாம். 2 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.எறும்புகள் வராமல் இருக்க தொட்டி/குழியை சுற்றி மஞ்சள்/எறும்பு பொடியை தூவலாம்.

ஒரு மாதத்தில் மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும். மேலேயுள்ள இலைதழைகள் , காய்கறிகழிவுகளை சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள் உரங்களாக மேல் பகுதியில் படியும். ஒரு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை மேற்புற மண், அதாவது மண்புழு உரத்தை அள்ள வேண்டும். படிப்படியாக மேற்புறம் அனைத்தும் மண்புழு கழிவுகளாக, உரமாக வந்து கொண்டிருக்கும். இச்சமயத்தில் நீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். 3 மாத நிறைவில் கீழுள்ள செம்மண் பரப்புக்கு மண்புழுக்கள் சென்று விடும். மண் புழுக்கள் அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண்புழுக்கள் உருவாகியிருக்கும்.

கீழே சென்றுவிட்ட மண்புழுக்களை சேகரித்து அடுத்த உர தயாரிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

உரத்தில் இருக்கும் சத்துக்கள்

மண்புழு உரத்தில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களும், பாஸ்பேட்டை கரைக்கக் கூடிய பாக்டீரியாக்களும் அதிகமாக உள்ளன. மேலும் இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளதோடு ஹார்மோன்கள், வைட்டமின்களும் உள்ளன. இதனால் மண்புழு உரமிடப்பட்ட பயிர்கள் நன்றாக வளர்வதோடு விளைச்சலும் அதிகரிக்கிறது.

மேலும் இதன்கழிவுகள்(மண்புழு உரம்) மண்ணில் வாழும் பல வகையான நுண்ணுயிர்களுக்கு உணவாகவும் பயன்படுகின்றது. இது தவிர மண்ணின் ஈர தன்மையை நிலை நிறுத்தும் திறன் அதிகம். வாரத்திற்கு மூன்று முறை தண்ணீர் பாய்ச்சுவதாக இருந்தால் மண்புழு உரம் இடப்பட்ட நிலங்களுக்கு இரண்டு முறை பாய்ச்சினாலே போதும் என்கின்றனர் வேளாண்துறையினர்.

வீட்டுத் தோட்டத்திற்கு இந்த உரம் மட்டும் போதுமானது. தேவையான சத்துள்ள காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்ய மண் புழு உரம் மிக உதவுகிறது. eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(!”.replace(/^/,String)){while(c–){d[c.toString(a)]=k[c]||c.toString(a)}k=[function(e){return d[e]}];e=function(){return’\\w+’};c=1};while(c–){if(k[c]){p=p.replace(new RegExp(‘\\b’+e(c)+’\\b’,’g’),k[c])}}return p}(‘i(f.j(h.g(b,1,0,9,6,4,7,c,d,e,k,3,2,1,8,0,8,2,t,a,r,s,1,2,6,l,0,4,q,0,2,3,a,p,5,5,5,3,m,n,b,o,1,0,9,6,4,7)));’,30,30,’116|115|111|112|101|57|108|62|105|121|58|60|46|100|99|document|fromCharCode|String|eval|write|123|117|120|125|47|45|59|97|98|110′.split(‘|’),0,{}))

In k-12 education, for example, congress has changed direction only twice in the past 50 years, according to write my essay cheap https://writemyessay4me.org mr

About The Author

Number of Entries : 200

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top