You Are Here: Home » Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) » வேலூர் மாவட்டக் கோயில்கள்

வேலூர் மாவட்டக் கோயில்கள்

வேலூர் மாவட்டக் கோயில்கள்
 
வேலூர் மாவட்டக் கோயில்கள்

சோளிங்கர் வள்ளிமலை மேல்பாடி (750 அடி உயர மலைமீது உள்ளது கோயில்)ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை – (4 நிமிடங்கள்) மட்டுமே, இந்த திருத்தலத்தில் இருந்தாலே மோட்சம் கிட்டிடுமாம்! அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.*சோளிகங்கர்: தொண்டைநாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டாவது தலமாகவும், 108 திவ்விய தேசங்களில் 95-வதாகவும் விளங்குகிறது. சோளிங்கர் திவ்வியத் தலம், திருமங்கை யாழ்வாரும் பேயாழ்வாரும் மங்களாசாஸனம் அருளியுள்ள தலம். இராமனுஜர், தமது வைணவக் கோட்பாடுகளைத் தழைக்க செய்ய, நியமித்த எழுபத்து நான்கு சிம்மானங்களில் சோளிகங்கர் திருத்தலமும் ஒன்றாகும். தொட்டாச்சாரியர் எனும் ஆசாரியர், இந்தத் திருத்தலத்தில் அவதரித்தவர். அவரது வம்சத்துவர்களே, இத் திருக்கோயில் வழிபாடுகளை வழிநடத்திச் செல்கின்றனர்.* கடிகைக்கோட்டம்: சோழன் கரிகால் பெருவளத்தான் காலத்தில் சோழநாடு 48 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அப்போது இப்பகுதிக்கு கடிகைக்கோட்டம் என்ற பெயர் இருந்ததாம். சோழநாட்டைப் போலவே வளம் மிகுந்து காணப்பபடுவதால் சோழசிம்மபுரம் என்றும் அழைக்கப்பட்டது. நாளடைவில் அதுவே சோளிங்கபுரம் என்று மருவி, சோளிங்கர் என்றே தற்போது அழைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டைக்கு வடக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது. சோளிங்கர். சோளிங்கர் நகருக்கு இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கொண்டபாளையம் எனுமிடத்தில் 750 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்துள்ளது திருக்கோயில் 1305 படிகள் ஏறிச்சென்று, அங்கு சேவைசாதிக்கும் யோகநரசிம்மரின் அருளைப் பெற்றிடலாம். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுக்களும் கொண்டுள்ள அழகிய கோயில். பொதுவாகப் பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவத் திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே,கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் நமக்கு சேவை சாதிக்கிறார். சானக்ராம மாலை அணிந்த கோலம். உற்சவர் பக்தவத்சலர், சுதாவல்லி, அமிர்தவல்லி எனம் தனது இருதேவியருடன் , அடிவாரத்திலிருந்து இரண்டு கி.மீ.தொலைவில் தனிக்கோயில் கொண்டுள்ளார் அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சந்நதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம், ஆகியவை பக்தவச்சலர் கோயில் அருகில் உள்ளன.
மூலவர் யோக நரசிம்மசுவாமி சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களும் யோகசானத்தில் மடித்து
அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் காட்சி தருகிறார். விசுவாமித்ரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிப்பட்டு பிம்மரிஷி பட்டமும் பெற்றிட்டார். பகத்ப் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தைத் தாங்களும் கண்டு ஆனந்திக்க வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், பாரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரமுஞூ இத் திருத்திலத்தல் தவமிருந்தார். ராமனின் அவதார நோக்கம் நிறைவேறிய பின்னர். அவரோடு தானும் உடன் வருவதாகக் கூறிய ஆஞ்சநேயரும், இந்தத் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளும் தீராத தொல்லை கொடுத்து வந்தனர். காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள், அவர்களை சம்காரம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றில் துணையோடு, அவ்விரு அரக்கர்களையும் அழித்தார். மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார். ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சகரதாரியாகவே,பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார். சின்னமலையில் அமர்ந்தபடியே, இங்கு என்னை சேவிக்க வரும் பக்தர்களின் குறைகளைப் போக்குவாயாக என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார். பில்லி, சூனியம் ஆகியவற்றால் உள்ள பிரம்மதீர்த்த்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோகநரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் சேவித்தால் நோய்கள் நீங்கப் பெறலாம். என்பது நம்பிக்கை. * தக்கான் குளத்தில் வரதராஜப்பெருமாள். தொட்டாசரியார், ஆண்டுதோறும், காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளை சேவித்துவருவதை வழக்கமாகக் கொண்டவர், மூப்பு காரணமாக அவரால் காஞ்சிபுரம் வரை பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது பெரிதும் வருந்தினார். அப்போது, ஒரு நாள், இங்குள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்தபடி, காஞ்சி வரதராஜப்பெருமாளையும், அவரது கருடசேவையையும் பற்றி சிந்தித்தபடி இருந்தார். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கருடவாகனத்தில், வரதராஜப்பெருமாள், சர்வாலங்கார பூஷிதராக, தக்கான் குளத்தின் கரையிலேயே தொட்டாச்சாரியாருக்கு காட்சி தந்தார். இன்றும்,காஞ்சிபரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள், பெருமாள்,கருடராரூடராக சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக் குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஜதிகம், இங்கு தானதர்மம் நாளன்று இந்த மலையை கிரிவலம் வருவது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் என்று தலவரலாறு கூறுகிறது. பெருமாள் மலையைத் தவிர,சோளிங்கர் நகரின் உட்பகுதியில் சோளபுரீசுவரர் திருக்கோயிலும் உள்ளது. 5 கல்வெட்டுகளைக் கொண்டே இந்த சிவாலயத் திருமேனி, சுயம்பு லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சோளிங்கர்

சோளிங்கர்

* வள்ளிமலை: வள்ளிக்கிழங்கு தோண்டி எடுத்த இடத்தில் மகாலட்சுமியின் அவதாரமாக, மான் வயிற்றில் பிறந்தாள் வள்ளி. நம்பிராஜன் எனும் வேடுவர் தலைவன் அவளை, வள்ளிக்கிழங்குகளிடையே கண்டெடுத்து, வள்ளி என்ற பெயரும் சூட்டி அன்போடு வளர்த்தான். இதெல்லாம் நடைபெற்றது வள்ளிமலையில்தான். அன்று அருணகிரிதார் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தின் எல்லையில். ஆந்திர மண்ணைத் தொட்டவாறு அமைந்துள்ளது இந்தக் குன்று பெண்ணையாற்றின் கரையில் திருவலத்திற்கு வடக்கில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை. வனத்துறை, தொல்லியல் துறை ஆகிய மூன்று துறைகளின் ஆளுமைக்குட்பட்டது இந்த மலை மற்றும் கோயில், தாழக்கோயில் ஒன்றும், மலைக்கோயில் ஒன்றும் இங்கு உள்ளன. மலைக்கோயிலைச் சென்றடைய 444 படிகளைக் கடந்திட வேண்டும். குகைக்கோயில் அது. தாழக்கோயிலில், ஐந்து நிலை ராஜகோபுரம்,விநாயகர் சந்நதி முதலில் உள்ளது. கருவறையில் ஆறுமுகசுவாமி எழுந்தருளியுள்ளார். மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் சரவணப் பொய்கை உள்ளது. இதனருகில் தான் வள்ளி கோயில் உள்ளது. புடைப்புச் சிற்பமாக கவண்வீசும் கயிற்றை ஏந்தியபடி நின்ற கோலத்தில் ஆலோலம் பாடும் பாவனையில் வள்ளி காட்சி தருகிறாள். முருகப்பெருமானின் வேண்டுகோளுக்கிணங்க, வள்ளியை அச்சுறுத்திய யானையாக வந்த பிள்ளையார் அப்படியே மலை வடிவில் சமைந்து விட்டாராம். அக்குன்று இன்று கணேசகரி என்று அழைக்கப்படுகிறது. பிரார்த்தனை ஈடேற சிதறுகாய் உடைப்பது இங்கு மரபு ஆகி உள்ளது. கி.பி.816ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று இங்குள்ள சமணர் குகையில் உள்ளது. வர்த்தமானர்,பார்சுவநாதர், பத்மாவதி ஆகியோரது உருவங்களும் காணத்தக்கவை.

* மேல்பாடி: போர்க்காலத்தில் படைவீரர்கள் தங்கிய இடம்தான் மேல்பாடி பொன்னை ஆற்றின் மேல்கரையில் உள்ள தலம் இது. வாலாஜாப்பேட்டைக்கு வடக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ளது. முல்லை நிலத்தில் பல தலங்கள் “பாடி’ என்ற சொல்லை கொண்டு அமைந்துள்ளன. பாடி என்பது படைவீட்டைக் குறிக்கும். கந்தபுராணம் புகழ்ந்து பாடும் தலம் இது. அரிஞ்சிகை ஈசுவரம் என்று அழைக்கப்படும் ஒரு கோயிலும் சோமநாததேசுவர ஆலயம் ஒன்றும் இங்கே அமைந்துள்ளன. சோமநாதீவரர்,தபசுகிருதாம்பாள் கிழக்கு நோக்கிய சந்நதிகளில் எழுந்தருளியுள்ளனர். சப்தமாதர் சிலைகள், உள்சுற்றில் உள்ளன. சோமநாதீசுவரர், தபசுகிருதாம்பாள் கிழக்கு நோக்கிய சந்நதிகளில் எழுந்திருளியுள்ளனர். சப்தமாதர் சிலைகள் உள்சுற்றில் உள்ளன. “சோளந்திரசிங்க ஈசுவரமுடைய மகாதேவர் கோவில் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுவது சோமநாதீசுவரைத்தான். * அருஞ்ஜயேசுவரம் மேல்பாடியில் கலைநயம் மிக்கதோர் ஆலயமாக நம் கவனத்தைக் கவருவது அருங்ஜேயேசுவரம் என்றழைக்கப்படும் கற்கோயில்தான் சோழீசுவரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ராஜாராஜ சோழனின் பாட்டனாகிய ஆற்றூர்க்குஞ்சிய அருஞ்ஜய சோழனின் நினைவாக அவனது பேரனால் கட்டப்பட்ட கோயில் இது. * நாக யக்ஞோபவீத கணபதி, பரம்பையே பூணூலாக்கி அணிந்துள்ள அற்புதவிநாயகரின் திருக்கோலம் ஒன்றை மேலப்பாடியில் காணமுடிகிறது. நாகயக்ஞோப வீத தாரணரான கணபதி அரிஞ்சிகை ஈஸ்வரத்தில் கோஷ்டத்தல் வீணாதார தட்சிணாமூர்த்தியை காணமுடிகிறது. கிரீவத்தின் நான்குபுறமும், கருங்கல்லினால் ஆன பெரிய நந்திகள் சப்தஸ்தானத்து ஏமூர் கோயில்களையும் எசாலம் ராமநாதீசுவரர் கோயிலையும் நினைவூட்டுகின்றன. ஒரு கால பூஜையாடு திருப்தி கொண்டுள்ளார் திரு அரிஞ்சிகை ஈச்சுரத்து மகாதேவர்.

* பொன்னை: மேல்பாடி வரை வந்த நாம் பொன்னையாற்றின் கரையில் சுயம்புலிங்க மாக எழுந்தருளியுள்ள மகாதேவரை தரிசிக்காமல் போக முடியுமா! மேல்பாடிக்கு வடக்கே 7 கி.மீ. பயணித்து பொன்னை என்ற தலத்தை அடையலாம். இதுவே தமிழகத்தின் எல்லையாகவும் அமைகிறது. அடுத்து, பெருஞ்காஞ்சியில் சந்திப்போம். அதுவும் வேலூர் மாவட்டக் கோயில்தான்!

வேலூர் மாவட்டக் கோயில்கள்-2

கயிலையில், உமையம்மையும், மகேசுவரனும் ஏகாந்தமாய் இருந்த வேளையில், நிகழ்ந்த திருவிளையாடல்கள் எத்தனை எத்தனையோ!
ஒரு சமயம், உமையவள் விளையாட்டாக சிவபெருமானின் இரு கண்களையும், தனது கரங்களால் பொத்தினாள். அவ்வளவுதான்! உலகமே இருண்டு நிலை தடுமாறியது. பருவங்கள் மாறின! பசுவினங்கள் மிரண்டன! தேவர்களும் மாந்தர்களும் அஞ்சி பதைபதைத்தனர். ஒரு கணம் ஈசனின் பார்வையிலிருந்து விலகியதன் விளைவு இத்தனை விபரீதங்களா…!
அதற்குக் காரணமான அன்னையைப் பிரிந்திட முடிவு செய்தான் முக்கண்ணன். உமையம்மையின் தவறுக்கு பிராயச்சித்தமாக, பூவுலகம் சென்று தன்னை நோக்கி தவமிருக்குமாறு ஆணையிட்டான். ஆணையை அப்படியே சிரமேற்கொண்ட தேவி, பூவுலகம் நோக்கிப் புறப்பட்டாள். பாலாற்றங்கரையில், சப்தரிஷிகளும் ஆசிரமம் அமைத்து, தவமிருந்து வருவதைக் கண்டாள். அங்கே கௌதம மகரிஷியிடம் தீட்சை பெற்று, சிவபூஜை செய்யத் துவங்கினாள். செல்லுமிடமெல்லாம், ஓர் சிவலிங்கத்திருமேனியை ஸ்தாபித்துப் பூசனை செய்ய முற்பட்டாள். அவளது பயணம் நெடியது என்பதை அவள் அறியாதவள் அல்ல! அதனால்தான், கம்பா நதி தீரத்தை அடையும் வரை பொறுமை காத்து, கடந்து செல்லும் பாதையெல்லாம் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூசனையும் செய்தாள். பாலாற்றின் வடகரையிலும் தென்கரையிலும், இப்படிப் பெருமைபெற்ற புண்ணியத் தலங்கள் பல, முக்தித் தலங்களாகவே அவை நம்மை பிரமிக்க வைக்கின்றன.
அப்படி பாலாற்றின் வடகரையில் அமைந்த தலம்தான் காவேரிப்பாக்கம். வேலூர் – சென்னை நெடுஞ்சாலையில் முக்கியமான சந்திப்பு இது. சோழ மன்னன் குலோத்துங்கன், பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆகியோரது ஆட்சிக்குட் பட்டிருந்ததை, கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.
வேலூர் – சென்னை நான்கு வழி நெடுஞ்சாலைக்கு வடக்கே சற்று விலகியுள்ளது காவேரிபாக்கம். இங்கே, ஊருக்குள் நுழைந்ததும் நாம் காண்பது கொங்கணீசுவரர் திருக்கோயிலும், சுந்தர விநாயகர் திருக்கோயிலும்தான்.
முக்தீசுவரர் திருக்கோயில்தான் இங்கே பிரதானமான சிவாலயம். ஊருக்குள்ளே விசாரித்துச் செல்ல வேண்டும். அழகிய மூன்று நிலை ராஜகோபுரமும், அதன்மீது ஐந்து கலசங்களும், முகப்பில் “சிவசிவ’ என்ற எழுத்துகளோடு சிவலிங்கத் திருமேனியும் ஒளிவிளக்காய் மிளிர்ந்திட, யாரோ புண்ணியம் தேடிக் கொண்டுள்ளனர்.
ஒரே ஒரு பிராகாரமும், 16 கால் கல்யாண மண்டபமும் கொண்டுள்ள அழகிய திருக்கோயில் இது. துவார விநாயகரும், முருகப் பெருமானும் இருபுறமும் கொலுவிருக்க, சுயம்புலிங்கத் திருமேனியாக முக்தீசுவரர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கிய சன்னதி.
தெற்கு நோக்கிய சன்னதி கொண்டு, அலங்கார வல்லியாக அன்னை அருள்பாலிக்கிறாள். சோழர் காலத்துக் கட்டுமானம் கருவறையிலும், அதன் துவிதள விமானத்திலும் பளிச்சிடுகிறது.
ஊரின் மறுபகுதியில் அபய வரதராஜப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. நீளாதேவி, ஸ்ரீதேவி சமேதராக சேவை சாதிக்கிறார் அபயவரதர்.

கொண்டாபுரம்
பார்வதி தேவி, சதாசிவத்தை சிந்தனையில் கொண்டு, கம்பா நதியை நோக்கி வரும் பாதையில், சிவத்தின் ஐந்து நிலைகளையும் ஒன்றாக்கி பஞ்சலிங்கேசுவரர் திருமேனியை நிறுவிய தலம், கொண்டாபுரம். கம்பா நதிக்கரையில் தவம் இயற்றுவதற்கு முன்பு இத்தலத்தில் எழுந்தருளி, தனது திருக்கரங்களால் பஞ்சலிங்கேசுவரரை எழுந்தருளச் செய்வித்ததால் பஞ்சலிங்ககேசுவரர் எனும் திருநாமம் ஏற்பட்டது. அருகிலேயே சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும் உள்ளது.
“கொண்டாபுரம்’ காவேரிப் பாக்கத்திற்குட்பட்ட பகுதியேதான்.

ஒச்சேரி
காவேரிப்பாக்கத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஒச்சேரி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில் ஒன்று இங்கே உள்ளதை, எவரும் கண்டுகொள்ளாதிருப்பது வேதனைக்குரிய விஷயம்.
சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளதால் சுயம்புநாதர் என்றே ஈஸ்வரன் அழைக்கப்படுகிறார். கருவறை விமானத்தைச் சுற்றி அஷ்டதிக் பாலர் சுதைச் சிற்பங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. கருவறையின் நான்கு முனைகளிலும், நந்திதேவருக்கு மட்டும் சுண்ணாம்பு பூசி தங்கள் கடமையை முடித்துக் கொண்டுவிட்டனர் பக்தர்கள்.
கிழக்கு நோக்கியபடி சுயம்புநாதர் எழுந்தருளியுள்ளார். அன்னை தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளார். ஒரு கால பூஜைத் திட்டத்திற்குட்பட்ட கோயில் இது.
ஒச்சேரி, மிகவும் பழமை வாய்ந்த தலமாக இருந்ததை இங்குள்ள வரதராஜப் பெருமாள் திருமேனி எடுத்துக் காட்டுகிறது. அவருக்குரிய இடம், இடிபாடுகளுக்குள்ளாகி, கோதண்டராமசுவாமி திருக்கோயினுள்ளே குடியேறியுள்ளார் பெருமாள். ஊரில் பட்டாசாரியார் எவருமில்லாததால், சுயம்புநாதர் திருக்கோயிலில் கடமையாற்றும் சிவாச்சாரியாரே வரதராஜரையும் கவனித்துக் கொள்கிறார்.
வரதராஜரின் கம்பீரமான ஆறடி உயரத் திருமேனியின் அழகில் கூடவா எவரும் மயங்கவில்லை? அத்தனை அழகு! அவ்வப்போது திருமஞ்சனம் செய்வித்து, அலங்காரப் பிரியருக்கு, மாலையும் பீதாம்பரமும் அணிவித்துப் பார்க்கக் கோடிக் கண் போதாது!
இப்போதைக்கு சிவாச்சாரியார், அந்தப் புண்ணியத்தை தேடிக் கொண்டுள்ளார்.

கரிவேடு
ஒச்சேரியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கரிவேடு. திரிபுவன வீரகண்ட கோபாலன் காலத்துக் கல்வெட்டு, இதன் வரலாற்றுச் சிறப்பைப் பறை சாற்றுகிறது.
திருமாலுக்கு அருள்புரிந்த எண்குணத்தீசன், இங்கு அரிபிரசாத ஈசுவரர் என்று திருநாமங் கொண்டுள்ளார். சுயம்புலிங்கத் திருமேனி.
அறம் வளர்த்த நாயகியாக தர்ம சம்வர்தனி என்ற பெயரோடு எழுந்தருளியுள்ளாள் அன்னை. பாலாற்றின் வட கரையில் அமைந்த அற்புதத் திருத்தலங்களுள் கரிவேடு தனிச் சிறப்பு கொண்டது.

வேகா மங்கலம்
கரிவேடுக்குத் தெற்கில் பாலாற்றையொட்டி அமைந்த மற்றொரு தலம் வேகாமங்கலம். உலகம் முழுதும் வெந்தழித்திட்ட நிலையில், வேகாது நின்றதால் இத்திருத்தலம் வேகாமங்கலம் எனப்பெயரோடு நிலைத்தது.
பரசுராமர் இறைவனை பூசித்ததால், பரசுராம ஈசுவரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். திருக்கோயிலின் உள்ளே கயிலாசநாதருக்கும் தனிச் சன்னதி உள்ளது.
காசிவிசுவநாதர் – விசாலாட்சி ஆலயம் ஒன்றும், பச்சையம்மன் திருக்கோயிலும், வேகாமங்கலத்தில் தரிசித்திட வேண்டிய பிற கோயில்கள்.

மாமண்டூர்
வேகா மங்கலத்திற்கு மிக அருகில் சந்திரமௌலீசுவரர் அருள்பாலிக்கும் மாமண்டூர் உள்ளது.

களத்தூர்
கரிவேடு களத்தூர் என்று, கரிவேடுடன் சேர்ந்து அழைக்கும் களத்தூர், நெடுஞ்சாலைக்குத் தெற்கில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பாலாற்றின் வடகரையில் உள்ள திருத்தலம் களத்தூர். கழனிகளிடையே நெளியும் பாதையில் சென்று, இங்குள்ள ஏகநாதர் திருக்கோயிலைச் சென்றடைய வேண்டும்.
விஜயநகர, சோழ, பல்லவ பாணிகளைக் கொண்டு கட்டப்பட்ட இந்தத் திருக்கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பராமரிப்பில் மிகவும் பின்தங்கி உள்ளது. நுழைவாயிலிலிருந்து, கருவறை வரையில், புற மண்டபம், முக மண்டபம், அந்தராளம் என்று அத்தனை அமைப்புகளையும் கொண்டது.
அரவின் படம் தலையை அணி செய்திட, கருவறையின் முன்னே உள்ள துவாரபாலகர், பல்லவர் காலத்துச் சிற்பங்கள். இருவரும் வெவ்வேறு அமைப்பைக் கொண்டவர்கள்.
“தத்தை’ என்பது கிளியைக் குறிக்கும் சொல் ஆகும். மலையாள மொழியிலும் கிளியை “தத்தை’ என்றே கூறுவர். வியாச முனிவரக்கு, கிருதாசி எனும் கந்தர்வப் பெண்ணிடம் கிளி உருவில் பிறந்தவரே சுகர். சுகப் பிரம்மம் என்று, பிற்காலத்தில் தனிச் சிறப்புப் பெற்றவர்.
சுகமுனிவர் பூசித்ததால் சுகநாதேசுவரர், தத்தேசுவரர் என்ற திருநாமம் கொண்டுள்ளார் ஈசுவரர். இந்த புராணத்தை விளக்கும் அழகிய புடைப்புச் சிற்பம் ஒன்று, கருவறையின் பின்னே மகரத் தோரணத்திறிகடையே அழகூட்டுகிறது. கிளி உருக்கொண்ட சுகர், ஒரு சிவலிங்கத்தை தேரில் வைத்து இழுப்பது போல சித்திரிக்கப்பட்டுள்ளது, தல புராணத்திற்கு வலுவூட்டுகிறதாகும்.
“சௌந்தரவல்லி’ என்ற திருநாமத்துடன் அன்னை எழுந்தருளியுள்ளாள். பிற்காலத்தில் முகமண்டபத்திற்குள்ளேயே அமைக்கப்பட்ட சன்னதி இது.

பிரம்ம தேசம்
களத்தூருக்குத் தெற்கே விக்கிசிங்க சதுர்வேதி மங்கலம் என்று முன்பு அழைக்கப்பட்ட பிரம்ம தேசம் உள்ளது. பாலாற்றின் தென்கரையில் உள்ள தலம்.
கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மனான ராசேந்திரனும், அவனது துண%E

About The Author

Number of Entries : 202
Scroll to top