You Are Here: Home » Our Great People - இதோ நல்லவர்கள் » Honest collector Ansul Misra

Honest collector Ansul Misra

 




Honest collector Ansul Misraலஞ்ச பணம் வசூலித்த மின்வாரிய ஊழியருக்கு கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நூதன தண்டனை வழங்கினார். வீடு வீடாகச் சென்று லஞ்ச பணத்தை கொடுக்கச் செய்தார்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி வாரந்தோறும் திங்கட்கிழமை நடந்து வருகிறது. இதுதவிர ‘பேஸ்புக்’ மூலமும் கலெக்டர் அன்சுல்மிஸ்ராவிற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

கலெக்டரின் பேஸ்புக்கிற்கு நூதன புகார் ஒன்று வந்திருந்தது. ‘மின்வாரிய அலுவலகங்களுக்கு மின்சார குறைபாடுகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த மனுக்கள் அனைத்தையும் மின்வாரிய ஊழியர் ஒருவர் சேகரித்து எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குறைகளை நிறைவேற்றி வைப்பதாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்.

சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேஸ்புக்கில் கூறப்பட்டிருந்தது.

இந்த விவரத்தை அறிந்து கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியரை நேரில் அழைத்து விசாரித்தார். யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்களோ அதை வீடு வீடாகச் சென்று உரியவர்களிடம் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் அந்த விவரத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும். இதை செய்ய தவறினால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.

இதனால் அதிர்ந்து போன அந்த மின்வாரிய ஊழியர், உடனடியாக வீடு வீடாகச் சென்று வாங்கிய லஞ்சப் பணத்தை திரும்ப ஒப்படைத்தார்.

இதனை கலெக்டரால் நியமிக்கப்பட்ட ஊழியர்களும் கண்காணித்து வந்தனர். லஞ்சம் வாங்கிய பணத்தை வீடு வீடாகச் சென்று கொடுத்து விட்டு அதற்கான விவரங்களுடன் மீண்டும் அந்த ஊழியர் கலெக்டர் முன் ஆஜரானார். தன்னை வேறு மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்ய வேண்டி கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதை ஏற்க கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மறுத்துவிட்டார். பணி இட மாறுதல் செய்து வேறு இடத்துக்கு அனுப்பினால் அங்கேயும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம் என்பதால் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலேயே பணியாற்ற அவருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

About The Author

Number of Entries : 62

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top